உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாடிப்பட்டி டூ திருமங்கலம் பஸ் வருமா... வராதா...

வாடிப்பட்டி டூ திருமங்கலம் பஸ் வருமா... வராதா...

வாடிப்பட்டி : வாடிப்பட்டியில் இருந்து சோழவந்தான், செக்கானுாரணி வழியாக திருமங்கலத்திற்கு பல ஆண்டுகளாக அரசு பஸ் தினமும் 5 முறை இயக்கப்பட்டது. 2016ல் சோழவந்தான் ரயில்வே மேம்பால பணியின் போது இச்சேவை நிறுத்தப்பட்டது. சில மாதங்களுக்கு முன் சோழவந்தான் பாலம் திறக்கப்பட்டது. வாடிப்பட்டி டூ திருமங்கலம் பஸ் மீண்டும் இயக்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தென்கரை கவுரிநாதன்: மீண்டும் பஸ் இயக்க முதல்வர் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பினேன். இந்த வழித்தடத்தில் மீண்டும் நேரடி பஸ் வசதி செய்து தரக்கூடிய சூழல் இல்லை என அரசு போக்குவரத்து மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார். அரசு பஸ்களை நம்பியுள்ள மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மீண்டும் இந்த வழித்தடத்தில் பஸ்சை இயக்க கலெக்டர் சங்கீதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை