உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சாகுபடி பணிகள் இன்றி தொழிலாளர்கள் தவிப்பு

சாகுபடி பணிகள் இன்றி தொழிலாளர்கள் தவிப்பு

பேரையூர்: பேரையூர் பகுதியில் போதிய மழை இன்றி நிலத்தில் விதைத்தவை முளைக்காததால் விவசாய தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். பேரையூர் தாலுகாவில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட மானாவாரி நிலங்களில் ஆடிப்பட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி, சோளம், தானிய வகைகளை விதைத்து இருந்தனர். ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்யாததால் விதைகள் முளைக்கவில்லை. இதனால் விவசாய கூலித் தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்திக்கின்றனர். மழை பெய்து இருந்தால் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை கிடைத்திருக்கும். இந்தப் பருவத்தில் களை எடுப்பு பணிகள், மருந்து தெளித்தால் போன்றவை நடைபெறும். இதனால் கூலித் தொழிலாளர்கள் வருமானத்தை இழந்துள்ளனர். தீபாவளி கொண்டாட ஒன்றரை மாதமே உள்ள நிலையில் தொடர்ந்து வேலை கிடைக்காதோ என்ற கவலையில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை