உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கைப்பந்து கடத்துவதில் உலக சாதனை முயற்சி

கைப்பந்து கடத்துவதில் உலக சாதனை முயற்சி

திருநகர், : மதுரை திருநகர் அண்ணா பூங்காவில் அன்னை பூமி புரட்சிகர கைப்பந்து கழகத்தின் சார்பில் குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற உலக சாதனை முயற்சி நடந்தது.கைப்பந்து அகாடமி நிறுவனர் அன்பரசன் கூறியதாவது: கைப்பந்தை கடத்துவதில் உலக சாதனை முயற்சியாக கைப்பந்து கழக மாணவர்கள் 16 பேர் நான்கு பிரிவுகளாக பங்கேற்றனர். காலை 8:20 மணிக்கு துவங்கிய போட்டி காலை 9:20 மணிக்கு நிறைவடைந்தது. 16 மாணவர்களும் ஒரு மணி நேரத்தில் 14 ஆயிரத்து 154 முறை பந்தை கடத்தி சாதனை படைத்தனர். முன்பு ஜெர்மனியில் ஒரு மணி நேரத்தில் 5 ஆயிரத்து 704 முறையே பந்தை கடத்தி சாதனை படைத்துள்ளனர்.இந்த சாதனையை நம்மாணவர்கள் முறியடித்துள்ளனர். உலக சாதனை படைத்த மாணவர்களுக்கு குளோபல் உலக சாதனை புத்தக நிர்வாகி ராஜேஷ் சான்றிதழ், பயிற்சியாளர் குமார் பதக்கங்களை வழங்கினர். திருநகரில் உள்ள கைப்பந்து மைதானத்தை மேம்படுத்தி கொடுத்தால், இங்கு பயிற்சி பெறும் வீரர்கள் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்ப்பர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை