மேலும் செய்திகள்
ஜெயேந்திரா சரஸ்வதி பள்ளியில் உலக சாதனை நிகழ்ச்சி
04-Sep-2025
மதுரை : மதுரை கே.எம்.ஆர்., சர்வதேச பள்ளியில் சுற்றுச்சூழல் சார்ந்த உலக சாதனை முயற்சிகள் நடக்கின்றன. மாணவர்களை சுற்றுச்சூழல் பொறுப்புள்ளவர்களாக மாற்றும் முயற்சியில், விதை பந்து தயாரிப்பு, வளர்ப்பு பைகள் நடவு உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் காலநிலை மாற்றம், காடழிப்பு, உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுஏற்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று சுமார் 2500 மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, 2.5 லட்சம் விதைப் பந்துகளை தயார் செய்தனர். செப். 9ல் 5000 வளர்ப்புப் பைகளைத் தயார் செய்ய உள்ளனர். மேலும் செப். 9ல் மாணவர்கள் 8 மணி நேரத்தில் வேதியியல் அட்டவணையை தொடர்ச்சியாக நினைவு படுத்துகின்றனர். மேற்கண்ட சாதனை முயற்சிகள் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றால் சான்றளிக்கப்பட உள்ளது. பசுமை தமிழ்நாடு திட்டத்திற்கு ஆதரவாக அரசுக்கு விதைப் பந்துகளை வழங்கினர். ஏற்பாடுகளை தாளாளர் கிருஷ்ணவேணி, முதல்வர் சரஸ்வதி, மூத்த முதல்வர் விஜய சுந்தர் செய்தனர்.
04-Sep-2025