உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணமா வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணமா வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்

மதுரை,: மதுரையில் போக்குவரத்து இணை கமிஷனர் சத்தியநாராயணன் தலைமையில் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (ஆர்.டி.ஓ.,) சிங்காரவேலு, சித்ரா முன்னிலை வகித்தனர்.இணை கமிஷனர் கூறுகையில், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. இதை தவிர்க்க நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். புகார் வந்தால் பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.ஆர்.டி.ஓ., அலுவலர்கள் அறிக்கையில், ஆம்னி பஸ்கள் இயக்கம், கூடுதல் கட்டணம் உட்பட புகார்கள் ஏதேனும் இருந்தால் 93848 08393 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம்.புகார்தாரர் பெயர், தொடர்பு எண், பயண டிக்கெட், கட்டண விவரம், பஸ் எண் மற்றும் பெயர் விவரங்களுடன் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி