மேலும் செய்திகள்
ரேஷன் கடை கூரை இடிந்து ஊழியர் படுகாயம்
23-Sep-2025
நீர் வளத்துறை தலைமை பொறியாளர் மயிலாடுதுறை காவிரியில் ஆய்வு
22-Sep-2025 | 1
மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளி மாணவி துாக்குப்போட்டு தற்கொலை செய்த கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகள் ரோஷினி ராஜாம்பாள்.13; மேலையூரில் உள்ள அழகு ஜோதி அகாடமி தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, பள்ளியில் மாணவி தவறு செய்ததாக ஆசிரியர்கள் அவரது தாய்க்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சந்தேக மரண வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை அரசு மருத்துவமனையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கலெக்டர் மகாபாரதி வந்தார். அவரை சந்தித்த மாணவியின் பெற்றோர், மாணவி செய்யாத தவறுக்கு தண்டனை கொடுத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தனர். இதையடுத்து, உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கலெகட்ர் உத்தரவிட்டார். போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோர் மாணவியின் உடலை பெற்றுக் கொண்டனர்.
23-Sep-2025
22-Sep-2025 | 1