மேலும் செய்திகள்
வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
09-Aug-2024
மயிலாடுதுறை : சீர்காழி அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது.மயிலாடுதுறை அடுத்த கீழவள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி மகன் ஆனந்தன்,48; விவசாயி. இவருக்கு நேற்று காலை 6:10 மணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன், அவரை காலை 6:45 மணிக்கு கொள்ளிடம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில் 8:15 மணிக்கு ஆனந்தன் இறந்து விட்டதாக அந்த டாக்டர் கூறினார்.உடன் ஆனந்தனின் உறவினர்கள், தவறான சிகிச்சையால் இறந்துவிட்டதாக கூறி மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டதுடன், ஆனந்தனின் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சீர்காழி- சிதம்பரம் சாலை போக்குவரத்து தடைப்பட்டது.தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், பிரேத பரிசோதனை அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று மறியல் விளக்கிக் கொள்ளப்பட்டது.பின்னர், ஆனந்தன் உடல் பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
09-Aug-2024