மேலும் செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் பெண் சிசு சடலமாக மீட்பு
12-Aug-2025
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குமார்,55; கொத்தனார். இவர் நேற்று முன்தினம் மாலை கீழே விழுந்து தலையில் காயம் அடைந்தார். ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இரவு சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று காலை மருத்துவமனையின் பின்புறம் உள்ள குட்டை நீரில் மூழ்கிய நிலையில் குமார் இறந்து கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்த குமாருக்கு, உமா மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
12-Aug-2025