உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / மக்களை அச்சுறுத்திய முதலை பிடிபட்டது

மக்களை அச்சுறுத்திய முதலை பிடிபட்டது

மயிலாடுதுறை : சீர்காழி அருகே மக்களை அச்சுறுத்திய முதலையை வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமமான பனங்காட்டங்குடி பள்ளிக்கூடத்தின் அருகே உள்ள குளத்தில் பெரிய முதலையை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதனால் அச்சமடைந்த மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து திருச்சி தலைமை வன பாதுகாவலர் பெரியசாமி, நாகப்பட்டினம் வன உயிரின பாதுகாப்பாளர் பார்க்கவ தேஜா ஆகியோரின் உத்தரவின் பேரில் சீர்காழி வனச்சராக அலுவலர் அயூப் கான் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து குளத்தில் முதலையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.நேற்று நள்ளிரவு நீண்ட தேடுதலுக்கு பிறகு 7 அடி நீளம், 65 கிலோ எடையுள்ள முதலை பிடிபட்டது. தொடர்ந்து அந்த முதலையை வனத்துறையினர் பாதுகாப்பாக எடுத்துச் சென்று அணைக்கரை லோயர் அணையில் விட்டனர். அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக முதலை பிடிக்கப்பட்டதால் கிராம மக்களை நிம்மதியடைய செய்துள்ளது. இந்த முதலை வெள்ள காலத்தில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியே வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை