உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / இரட்டை கொலை தொடர் பதற்றம்

இரட்டை கொலை தொடர் பதற்றம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் அருகே முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால் ஹரிஷ், ஹரி சக்தி என்ற இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். அஜய் என்பவர் சிகிச்சையில் உள்ளார்.பெரம்பூர் போலீசார், ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகிய மூவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். கொலைக்கு முன்விரோதமே காரணம் என போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதால், பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மூவேந்தன், தங்கதுரை ஆகியோரின் தந்தை முனுசாமி உள்ளிட்ட சிலரை நேற்று போலீசார் விசாரித்தனர்.இதற்கிடையே, நேற்று முன்தினம் நள்ளிரவு முட்டம் பகுதியில் செல்வம் என்பவர் தர்ப்பூசணி வியாபாரம் செய்து வரும் கீற்றுக் கொட்டகைக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்தனர். இது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி