உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / எரிவாயு கிணறு நிரந்தரமாக மூடப்படும்

எரிவாயு கிணறு நிரந்தரமாக மூடப்படும்

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, காரியமங்கலத்தில், 2013ல், ஓ.என்.ஜி.சி., சார்பில், இயற்கை எரிவாயு கிணறு தோண்டப்பட்டது. அப்போது, அளவுக்கு அதிகமான இயற்கை எரிவாயு கசிந்தது. இதையடுத்து, கிணறு தற்காலிகமாக மூடப்பட்டது.நீதிமன்ற வழிகாட்டுதல்படி, எரிவாயு கிணறு அமைந்துள்ள காரியமங்கலத்தில் நேற்று, கலந்தாய்வு கூட்டம் நடந்தது. 'எரிவாயு கிணறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதை நிரந்தரமாக மூட வேண்டும். ஓ.என்.ஜி.சி.,யின் அனைத்து பொருட்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்' என, கிராம மக்கள் வலியுறுத்தினர்.நிர்வாக இயக்குனர் மாறன் கூறுகையில், ''அறிவித்தபடி, காரியமங்கலம் எரிவாயு கிணறு ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிரந்தரமாக மூடப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை