உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / சாலையில் நாற்று நடும் போராட்டம்

சாலையில் நாற்று நடும் போராட்டம்

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே கொத்தங்குடி ஊராட்சியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்ட் சாலை கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருப்பதால் சீரமைத்து தர கோரி பெண்கள் சாலையில் நாற்று நட்டு போராட்டம் liyfyhpaf.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கொத்தங்குடி ஊராட்சி பனங்குடி காலனி தெருவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்ட் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பலமுறை புகார் அளித்தும் சாலையை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்தும், சாலையை சீரமைத்து தர கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் குளம் போல் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ள சாலையில் பெண்கள் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலையை சீரமைத்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை