உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / முன்விரோத தகராறில் முதியவர் அடித்து கொலை

முன்விரோத தகராறில் முதியவர் அடித்து கொலை

நாகப்பட்டினம்:நாகையில் முன்விரோதத்தில், முதியவரை அடித்து கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.நாகை மாவட்டம், வெளிப்பாளையம் முச்சந்தி காளியம்மன் கோவில் திருவிழா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது, நடன நிகழ்ச்சியின்போது, அப்பகுதியை சேர்ந்த இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கோவில் திருவிழா முன்விரோதம் காணமாக, நேற்று முன்தினம் இரவு உதயகுமார்,25, என்பவரின் வீட்டிற்கு சென்ற, 5 பேர் கொண்ட கும்பல், உதயகமாரை தாக்கியது. இதை தடுத்த அவரது தந்தை பக்கிரிசாமி,65, என்பவரையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பக்கிரிசாமி உயிரிழந்தார்.வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, பக்கிரிசாமி கொலை வழக்கில் விக்கி, 20, பிருத்விராஜ், 21 இருவரை கைது செய்தனர். தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை