உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / கோவிலில் தரிசனம் செய்த மாஜி கவுன்சிலர் தீ வைத்து எரிப்பு ; மர்ம நபர்களுக்கு வலை

கோவிலில் தரிசனம் செய்த மாஜி கவுன்சிலர் தீ வைத்து எரிப்பு ; மர்ம நபர்களுக்கு வலை

மயிலாடுதுறை : தரங்கம்பாடியில் கோவிலில் சாமி தரிசனம் செய்த முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரை எரித்து கொல்ல முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் தம்பா (எ) அருண்குமார்,42; பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர். தற்போது ரோட்டரி சங்க தலைவராக உள்ளார்.இவர் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், தரங்கம்பாடி கடற்கரையில் அமைந்துள்ள பழமையான மாசிலாமணி நாதர் கோவிலில் நடைபெற்ற அர்த்தசாம பூஜையில் பங்கேற்றார்.பின்னர், கடற்கரையில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் தரிசனம் செய்து கொண்டிருந்தார்.அப்போது, தம்பா மீது ரெக்சின் கலந்த எரிபொருளை ஊற்றிய மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.அதில், பலத்த தீக்காயமடைந்த தம்பாவை, அங்கிருந்த பக்தர்கள் காப்பாற்றி, சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பிறகு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் தம்பாவிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார்.தம்பாவை எரித்துக் கொல்ல முயன்ற நபர்கள் யார், காரணம் என்ன என்பது குறித்து பொறையார் போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவிலில் சாமி கும்பிட்டவரை எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் தரங்கம்பாடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி