மேலும் செய்திகள்
த.வெ.க.,வினர் மீது நாகை போலீசார் வழக்கு
22-Sep-2025
நாகை மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்
13-Sep-2025
சிவ மந்திரம் பாட150 பேர் இலங்கை பயணம்
05-Sep-2025
நாகப்பட்டினம்:நாகை மாவட்டம், உத்தமசோழபுரத்தில், 100 விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை ஒட்டி பாயும், வெட்டாற்றின் கரையோரம் சில ஆண்டுகளுக்கு முன், மீன் எண்ணெய் தயாரிக்கும், 'மார்வாஸ்ட் அக்வா புரோட்டான்' என்ற தனியார் தனியார் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இத்தொழிற்சாலை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, கழிவுநீர் தொட்டிகளை கட்டியுள்ளது. இதனால் ஏற்படும் துர்நாற்றம் காரணமாக, கிராம மக்கள் பல சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:தனியார் மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை, கழிவுநீரை வெட்டாற்றில் விடுகின்றனர். ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவில் மீன் எண்ணெய் நிறுவனம் இயங்குகிறது.கோவில் இடத்தை ஆக்கிரமித்துள்ளதால், கிராம ஐதீக சடங்குகள் தடைபட்டுள்ளன.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அறநிலையத் துறை துணை ஆணையர் ராணியிடம் கேட்டபோது, ''தனியார் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இணை ஆணையர் அலுவலகத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
22-Sep-2025
13-Sep-2025
05-Sep-2025