உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / 25 கிலோ கஞ்சா சிக்கியது; இருவர் கைது

25 கிலோ கஞ்சா சிக்கியது; இருவர் கைது

நாகப்பட்டினம் : நாகையில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்து, 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.நாகை மாவட்டம், கீழையூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு பிரதாபராமபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு, சந்தேகத்திற்கிடமாக நின்ற இரு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.அவர்கள், புதுச்சேரி மாநிலம், கூனிச்சம்பட்டு, ஐய்யனாரப்பன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரதீப், 30, நாகை மாவட்டம், செருதுார், செல்வம், 39, என்பதும், இருவரும் இரண்டு பைகளில் 25 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி, விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. கீழையூர் போலீசார் இருவரையும் கைது செய்தனர். கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை