உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / அவரிகாடு கிராமத்துக்கு பஸ் கிராம பொதுமக்கள் வரவேற்பு

அவரிகாடு கிராமத்துக்கு பஸ் கிராம பொதுமக்கள் வரவேற்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த அவரிகாடு கிராமத்தில் புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்படுவதுக்கு அக்கிராம மக்கள் வரவேற்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த சில நாட்களுக்கு முன் வேதாரண்யத்தில் இருந்து ஆயக்காரன்புலம், சிங்கள்சந்தையடி, கரியாப்பட்டினம், செட்டிபுலம், கத்திரிப்புலம், நாககுடையான் வழியாக அவரிகாடு கிராமத்துக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழித்தடத்தில் நேற்று பஸ் இயக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாமல் இருந்த அவரிகாடு கிராமத்தினர் தங்களது கிராமத்தின் வழியாக பஸ் இயக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைந்தனர். பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் புதிய வழித்தடத்தில் பஸ் நிற்கும் இடங்களில் அனைத்து கிராமங்களிலும் உள்ள மக்கள் இந்த பஸ்ஸை வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுரை எம்.பி., ஓ.எஸ்.மணியன், எம்.எல்.ஏ., காமராஜ், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ரவிச்சந்திரன், தொகுதி செயலாளர் சண்முகராசு, தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் அவை பாலசுப்பிரமணியன், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் திருமறைநாதன் மற்றும் அண்ணா தொழிற் சங்கத்தினர் கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை