மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
26-Jan-2025
காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில்பிப்., 11ல் தைப்பூச திருவிழா: 3ல் கொடியேற்றம்மோகனுார் :காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், வரும், 11ல் தைப்பூச தேர் திருவிழா நடக்கிறது. முன்னதாக, வரும், 3ல் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.மோகனுாரில் பிரசித்தி பெற்ற காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோவிலில் ஆண்டுதோறும், தைப்பூச திருத்தேர் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா, வரும், 11ல் நடக்கிறது. முன்னதாக, வரும், 3 காலை, 9:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, அபிஷேகம், சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.தொடர்ந்து, வரும், 4 முதல், 10 வரை, தினமும் காலை, 10:00 மணிக்கு அபிஷேகம், மாலை, 6:00 மணிக்கு, அன்னம், பூதம், ஆட்டுக்கிடா, யானை, மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர் களுக்கு அருள்பாலிக்கிறார். 9 காலை, 10:00 மணிக்கு அபிஷேகமும், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது. 11 காலை, 10:30 மணிக்கு, சுவாமி திருத்தேர் ஏற்றம் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.பிப்., 12 காலை அபிஷேகம், மாலை, சத்தாபரணம், 13ல், விடையாற்றி, மஞ்சள் நீர் பல்லக்கு, 14ல் மயில் வாகனத்தில் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்துள்ளனர்.
26-Jan-2025