உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல்லில் சித்த மருத்துவரை தாக்கிநகை, பணம் பறித்த 7 பேருக்கு காப்பு

நாமக்கல்லில் சித்த மருத்துவரை தாக்கிநகை, பணம் பறித்த 7 பேருக்கு காப்பு

நாமக்கல்லில் சித்த மருத்துவரை தாக்கிநகை, பணம் பறித்த 7 பேருக்கு 'காப்பு'நாமக்கல்:சித்த மருத்துவரை தாக்கி, மொபைல் போன், நகை, பணம் பறித்த ஏழு பேரை, நாமக்கல் போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினம், 31; திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், சித்த மருத்துவர். கடந்த, 26ல், மோகனுார் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை முன் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது டூவீலரில் வந்த, வாலிபரிடம், 'லிப்ட்' கேட்டு சென்றார். கொங்குநகர் அருகே, ரயில்வே பாதைக்கு அழைத்து சென்றார். அங்கு நின்றிருந்த மேலும் சிலர், ரத்தினத்தை கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போன் மற்றும் 'ஜிபே' கணக்கில் இருந்து, ஒரு லட்சம் ரூபாய், 2.5 பவுன் தங்க காப்பை பறித்துக்கொண்டு தப்பினர். புகார்படி நாமக்கல் போலீசார் விசாரித்தனர்.நாமக்கல் இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையிலான போலீசார், நேற்று மாலை, வகுரம்பட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக டூவீலரில் வந்த, இரண்டு பேரை நிறுத்தினர். ஆனால், அவர்கள் வண்டியை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். அவர்களை போலீசார் ஜீப்பில் விரட்டி சென்றனர். அவர்கள் டூவீலரை அங்கேயே விட்டுவிட்டு, ரயில்வே மேம்பாலத்தில் ஏறி தப்ப முயன்றனர்.அப்போது, பாலத்தில் இருந்து தவறி விழுந்த இருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், பட்டறைமேடு கார்த்திகேயன், 22, தில்லைபுரம் காமராஜர் நகரை சேர்ந்த புருஷோத்தமன், 24, என்பது தெரியவந்தது. மேலும், சித்த மருத்துவரை தாக்கி நகை, பணம் பறித்த வழக்கில், என்.கொசவம்பட்டி அருண், 22, சிவநாயக்கன்பட்டி எஸ்.சஞ்சய், 21, மதுரை கீழையூர் கார்த்திகேயன், 21, திருமலைப்பட்டி சஞ்சய், 19, என்.கொசவம்பட்டி அருண்குமார், 24, ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஏழு பேரையும் கைது செய்த போலீசார், தங்க காப்பை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி