தேங்காய் பருப்பு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
தேங்காய் பருப்பு விலைஉயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சிசேந்தமங்கலம், அக். 4-தேங்காய் பருப்பு விலை உயர்ந்துள்ளதால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள எருமப்பட்டி, காரவள்ளி, கோம்பை, நடுக்கோம்பை, காளப்பநாய்க்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், விவசாயிகள் தென்னை மரங்கள் வளர்த்து வருகின்றனர். இந்த பகுதி தென்னை மரங்களில் பருப்புகள் அடர்த்தியாக உள்ளதால், தேங்காய்களுக்கு வெளி மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களாக தேங்காய் பருப்பு விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் வரை தேங்காய் பருப்பு கிலோ, 70 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில், திடீரென 30 ரூபாய்க்கு மேல் உயர்ந்து, 100 முதல், 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.