மேலும் செய்திகள்
குறு, சிறு தொழில்களின் வரிச்சுமை குறையுமா?
30-Jan-2025
நாமக்கல்: 'வெளிநாட்டில் இருந்து குறைந்த விலையில், தரமற்ற டயர்-களை இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்' என, டயர் ரீட்ரெட்டிங் உரிமையாளர்கள் சங்க செயற்-குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நாமக்கல் தாலுகா டயர் ரீட்ரெட்டிங் உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நாமக்கல்லில், நேற்று நடந்தது. சங்க தலைவர் வரதராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் மல்லீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ராஜ்குமார், கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.கூட்டத்தில், சைனா, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து, உற்பத்தி செய்யப்பட்ட தரமற்ற, விலை குறைந்த டயர்-களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதை, மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். அவற்றை அனுமதிக்கும்போது, உள்-நாட்டில் தயாரிக்கப்படும் தரமான டயர்கள் விற்பனை பாதிப்ப-துடன், டயர் ரீட்ரெட்டிங் தொழில் கடுமையான இழப்பை சந்-திக்கும் நிலை ஏற்படும். மேலும், அரசுக்கு வருவாய் இழப்பும், உள்ளூர் வர்த்தகமும் பாதிக்கும். அவற்றை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாமக்கல் ரிங்ரோடு பணிகளை விரைந்து முடித்து, நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் நிறைவேற்றப்படும் தமிழக நிதிநிலை அறிக்கையில், டயர் ரீட்ரெட்டிங் உரிமையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, மின் கட்டண சலுகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டன. சங்க துணை தலைவர் தர்மலிங்கம், துணை செயலாளர்கள் வெங்கடேஷ், ஹரி, மாவட்ட, தாலுகா நிர்வா-கிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
30-Jan-2025