குமாரபாளையம்: அகில பாரத ஐயப்பா சேவா சங்கம், நாமக்கல் மாவட்ட தொண்டர் படை பிரிவு சார்பில், நவரத்தின விழா, பள்ளிபாளையம் ஆவரங்காடு ஊராட்சி துவக்கப்பள்ளியில், நடந்தது. மாவட்டத் தலைவர் ஜெகதீஸ் தலைமை வகித்தார். நகர கிளைச்செயலாளர் சரவணன் வரவேற்றார். கிளைச்செயலாளர் பழனியப்பன் சங்க கொடியேற்றினார். ரத்ததான முகாமை மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார். அதில், 63 பேர் ரத்ததானம் வழங்கினர்.அதை தொடர்ந்து முதியோருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. பள்ளிபாளையம் அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு, மாவட்டத் துணைத்தலைவர்கள் கருப்பண்ணன், லோகநாதன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.
மேலும், எம்.ஜி.ஆர்., நகர் குழந்தைகள் மையத்துக்கு ஃபேன், தட்டு, டம்ளர் வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணன், மோகன்லால் உள்ளிட்ட பொறுப்பாளர்களுக்கும், சபரிமலையில் சேவை செய்த தியாகராஜன், பிரபு, சுப்ரமணியன், மகேந்திரன், தங்கவேல் உள்ளிட்ட, 20 பேரும் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், பொருளாளர் வெங்கடாஜலம், நிர்வாகிகள் முருகன், ரவி, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.