சாலை அகலப்படுத்தும் பணி விரைந்து முடிக்க அறிவுரை
சாலை அகலப்படுத்தும் பணி விரைந்து முடிக்க அறிவுரைராசிபுரம் :ராசிபுரம் தாலுகாவில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய சாலை அமைத்தல், சாலை மேம்பாடு, சாலை அகலப்படுத்துதல், சிறுபாலம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. குருசாமிபாளையம், மூலப்பள்ளிப்பட்டி, உரம்பு ஆகிய பகுதிகளில் முடிவுற்ற பழுது பார்த்தல் பணி மற்றும் அலவாய்பட்டி சாலை சந்திப்பை மேம்பாடு செய்யும் பணிகளை, சேலம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் ஆய்வு செய்தார்.அப்போது, சாலையின் தரம், கனம் ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. ஜல்லி உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்து விசாரிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி காக்காவேரி பகுதியில் நடைபெறும் சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கப்பட்டது. ஏற்கனவே சாலையோரம் நடப்பட்ட மரங்களை, உரிய முறையில் பராமரிக்கவும், சாலைகளை பராமரிப்பது குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ராசிபுரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஸ்குமார், உதவி கோட்ட பொறியாளர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.