உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.23,848 கோடிகடனாற்றல் திட்ட அறிக்கை: கலெக்டர் வெளியீடு

மாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.23,848 கோடிகடனாற்றல் திட்ட அறிக்கை: கலெக்டர் வெளியீடு

மாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.23,848 கோடிகடனாற்றல் திட்ட அறிக்கை: கலெக்டர் வெளியீடுநாமக்கல்:''மாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம், 23,848.98 கோடி ரூபாய் அளவுக்கு கடனாற்றல் உள்ளதாக மதிப்பீடு செய்து, திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் உமா பேசினார்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வங்கியாளர்களுக்கான மாவட்ட அளவிலான ஆய்வுக்குழுக் கூட்டம் நேற்று நந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.தொடர்ந்து, நபார்டு வங்கியின், 2025--26ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை வெளிட்டார்.அப்போது, அவர் பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து, தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு வங்கி) மூலம், 23,848.98 கோடி ரூபாய்க்கு கடனாற்றல் உள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்தில் நீண்டகால கடன் அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை இத்திட்டம் விளக்குவதாக குறிப்பிட்டார்.அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்திற்கு, 2025-26ம் ஆண்டுக்கு, பயிர் கடன், 10,751.96 கோடி ரூபாய், விவசாய முதலீட்டு கடன், 2,753.24 கோடி ரூபாய், விவசாய கட்டமைப்பு கடன், 72.13 கோடி ரூபாய், விவசாய இதர கடன்கள், 1,042.64 கோடி ரூபாய் என, மொத்தம், கடன் மதிப்பீடு, 14,619.98 கோடி ரூபாய்.மேலும், சிறு, குறு நடுத்தர தொழில் கடன், 8,098 கோடி ரூபாய், ஏற்றுமதி, கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான கடன், 211.63 கோடி ரூபாய், அடிப்படை கட்டுமான வசதி, 65.08 கோடி ரூபாய், சுய உதவிக்குழு மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கான கடன் அளவு, 796.04 கோடி ரூபாய் என, மொத்தம், 23,848.98 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என, மதிப்பீடு செய்து கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இதுபோன்ற கடன் வசதிகள், விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி, விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும். வேளாண்மையில் இயந்திரமயமாக்கல், சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கிட உதவும்.வங்கிகள், இதுபோன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்கும். இத்திட்ட அறிக்கையானது, மாவட்டத்தின் கடன் திட்டமிடுதலில் ஒரு அங்கமாக இருந்து, வங்கிகளுக்கு கிளை அளவிலான கடன் குறியீட்டை நிர்ணயம் செய்வதற்கு உதவிகரமாக அமையும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை