உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாலை விரிவாக்க பணிஅதிகாரிகள் தரப்பரிசோதனை

சாலை விரிவாக்க பணிஅதிகாரிகள் தரப்பரிசோதனை

சாலை விரிவாக்க பணிஅதிகாரிகள் தரப்பரிசோதனைஎருமப்பட்டி:நாமக்கல்-துறையூர் சாலை, ரெட்டிப்பட்டியில் இருந்து எருமப்பட்டி வரை நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால், அடிக்கடி விபத்து நடக்கிறது. இதை தடுக்க, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை மூலம் இந்த சாலையை விரிவாக்கம் செய்ய, அரசிடம் நிர்வாக அங்கீகாரம் பெறப்பட்டது. அதை தொடர்ந்து, முதல் கட்டமாக, 9 கி.மீ., துாரத்திற்கு, எருமப்பட்டி கைகாட்டி வரை, 40 கோடி ரூபாயில், இரு வழிச்சலையாக மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.இதில், தடுப்பு சுவர் அமைத்தல், சிறு பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியை, சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் ஆய்வு செய்தார். அப்போது, அகலப்படுத்தும் சாலை பகுதியில் ஜல்லி கலவையின் விகிதங்கள் மற்றும் தரம் குறித்து சோதனை செய்தார். நாமக்கல் கோட்ட பொறியாளர் திருகுணா, சேந்தமங்கலம் கோட்ட பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் பிரனேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை