மேலும் செய்திகள்
மது பாருக்கு 'சீல்'
15-Mar-2025
தீபாவளி சீட்டு மோசடி: பாதிக்கப்பட்ட மக்கள் புகார்பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ், 45; இவர், தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்த திட்டத்தில், அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலரும் சேர்ந்து, தவணை முறையில் பணம் செலுத்தி வந்தனர். தீபாவளி சீட்டு முடிந்து, நான்கு மாதங்களாகியும், தவணை செலுத்தியவர்களுக்கு முதிர்வு தொகையுடன் கூடிய பணத்தை தரவில்லை. இதுகுறித்து, மாதேஷிடம் பலமுறை கேட்டும் பணம் இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை பாதிக்கப்பட்ட பெண்கள், பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.இதுகுறித்து, பள்ளிப்பாளையம் போலீசார் கூறியதாவது:ஆவத்திபாளையம் பகுதியை சேர்ந்த மாதேஷ் என்பவர் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் சீட்டு போட்டவருக்கு பணம் தராததால், நேற்று ஏழு பேர், 'தங்களுக்கு, மூன்று லட்சம் ரூபாய் வரை பணம் வழங்காமல் ஏமாற்றி வருகிறார்' என புகாரளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
15-Mar-2025