உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாரி மீது டூவீலர் மோதிபேக்கரி மாஸ்டர் பலி

லாரி மீது டூவீலர் மோதிபேக்கரி மாஸ்டர் பலி

லாரி மீது டூவீலர் மோதிபேக்கரி மாஸ்டர் பலிமல்லசமுத்திரம்:திருப்பத்துார் மாவட்டம், நாட்ராம்பள்ளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருப்பதி மகன் முத்துப்பாண்டி, 31; மல்லசமுத்திரத்தில் பேக்கரி மாஸ்டர். மல்லசமுத்திரம் வடக்கு தெருவை சேர்ந்த பாஷா மகன் தஸ்தகீர், 28. முத்துப்பாண்டியும், தஸ்தகீரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு இருவரும் சாப்பிடுவதற்காக, முத்துப்பாண்டியின், 'டி.வி.எஸ்., மேஸ்ட்ரோ' டூவீலரில், நெசவாளர் காலனி பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்றனர். அங்கு சாப்பிட்டு முடித்த பின், இரவு, 12:00 மணிக்கு, சூரியகவுண்டம்பாளையம் பஸ் ஸ்டாப் வழியாக திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, முன்னாள் சென்ற, 'அசோக் லேலேண்ட்' லாரியின் பின்புறம், எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், முத்துப்பாண்டியும், தஸ்தகீரும் தலைக்கவசம் அணியாததால் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரையும் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே முத்துப்பாண்டி உயிரிழந்தார். தஸ்தகீர் சிகிச்சை பெற்று வருகிறார். மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ