உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வையப்பமலையில் பவுர்ணமி கிரிவலம்

வையப்பமலையில் பவுர்ணமி கிரிவலம்

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, மலைக்குன்றின் மீது பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. நேற்று, ஆனி பவுர்ணமியையொட்டி, மலைக்குன்றின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்கண சித்தர் குகையில், மதியம், 12:00 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அன்னதானம் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். இரவு, 8:00 மணிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை