மேலும் செய்திகள்
இன்று இனிதாக: திருப்பூர்
02-Feb-2025
பகவதியம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம்நாமக்கல்: நாமக்கல், கணக்கம்பாளையத்தில் மஹா கணபதி, பகவதி அம்மன், சப்த கன்னிமார் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, வரும், 10ல் நடக்கிறது.அதையொட்டி, நேற்று முன்தினம் கிராம சாந்தி நடந்தது. நேற்று காலை, மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். இன்று மாலை, 6:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதற்கால வேள்வி நடக்கிறது. நாளை காலை, 9:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, 11:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மாலை, 5:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜை நடக்கிறது.வரும், 10 காலை, 7:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, 9:00 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. அதை தொடர்ந்து, கோபுர கலசங்கள் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.
02-Feb-2025