மேலும் செய்திகள்
உண்டியல் காணிக்கைதிருடிய வாலிபர் கைது
02-Apr-2025
வெண்ணந்துார் நகரகாங்., கமிட்டி கூட்டம்வெண்ணந்துார்:வெண்ணந்துார் நகர காங்., கமிட்டி கூட்டம், நேற்று நடந்தது. தலைவர் சிங்காரம் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் தங்கமுத்து, காசி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தொகுதி மறுவரையறையை, அனைத்து அரசியல் கட்சிகள், மாநில அரசுகளை கலந்து முடிவெடுக்க வேண்டும்.தமிழகத்தில், 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டும், சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலை, ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் ஒரு சில பஸ்கள் நின்று செல்லாமல் மேம்பாலம் வழியாகவே செல்கின்றன.இதனால், வெண்ணந்துார், அத்தனுார், தேங்கல்பாளையம், குட்டலாடம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அனைத்து பஸ்களும் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதியில் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
02-Apr-2025