உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பூலித்தேவன் பிறந்த நாள் கொண்டாட்டம்

பூலித்தேவன் பிறந்த நாள் கொண்டாட்டம்

குமாரபாளையம்: குமாரபாளையம், வேதாந்தபுரத்தில், விடியல் ஆரம்பம் சார்பில், சுதந்திர போராட்ட தியாகி மாவீரர் பூலித்தேவன் பிறந்த நாள் விழா மற்றும் உலக கடிதம் தினம் கொண்டாடப்பட்டது. அமைப்பாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். தொடர்ந்து, பூலித்-தேவன் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்-தப்பட்டது. உலக கடித தினத்தையொட்டி, தபால் அட்டை, பேனா வழங்கி, மாணவ, மாணவியருக்கு கடிதம் எழுதும் பயிற்சி வழங்கப்பட்-டது. மேலும், மாணவ மாணவியருக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி