உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / யூனியன் ஆபீசில் தீ விபத்து

யூனியன் ஆபீசில் தீ விபத்து

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம், பச்சுடையாம்பட்டியில் யூனியன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை, வழக்-கம்போல் அலுவலகத்தை பணியாளர்கள் பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை, யூனியன் அலுவலகத்தில் உள்ள கணினி அறையில் இருந்து புகை வெளியேறியது. இதை பார்த்த அப்பகு-தியில் இருந்தவர்கள், நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், கணினி அறையில் பற்றி எரிந்த தீயை அணைத்-தனர். ஆனால் அதற்குள், நான்கு கணினி, இரண்டு, 'ஏசி' உள்பட, ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து வீணாகின. சேந்தமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை