| ADDED : ஆக 20, 2024 03:06 AM
நாமக்கல்: பள்ளிப்பாளையம் பகுதியில், தனியார் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட உள்ள மதுபான பாருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் உமாவிடம், அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:பள்ளிப்பாளையம் அடுத்த கண்டிப்புதுார் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வந்தது. தற்போது, அதில் தனியார் மதுபான பார் அமைக்க, ஏற்பாடு நடந்து வருகிறது. இப்பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவியர் அதிகம் உள்ளனர். இங்கு, மூன்று தனியார் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. அதனால் மதுபான பார் அமைந்தால், அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து, பார் நடத்தும் உரிமையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.