உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தீப்பிடித்து எரிந்த மரம் அகற்ற கோரிக்கை

தீப்பிடித்து எரிந்த மரம் அகற்ற கோரிக்கை

மோகனுார் : மோகனுார் தாலுகா, ஒருவந்துார் பஞ்., ஒரு-வந்துார் புதுார் அருகே, சாலையோரம், 40 அடி உயர புளிய மரம் உள்ளது. நேற்று மதியம், 1:00 மணிக்கு, இந்த புளிய மரத்தின் அடிப்பகுதியில் தீ பிடித்தது. பொதுமக்கள் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீப்பிடித்த புளிய மரத்தில் இருந்து, 15 அடி துாரத்தில் டிரான்ஸ்-பார்மர் அமைந்துள்ளது. இதனால், தகவலறிந்த மின்வாரியத்துறையினர், ஒயர்களை கழட்டி அப்-புறப்படுத்தினர். நாமக்கல் தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீ மேலும் பர-வாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மரத்தின் அடிப்பகுதி நன்றாக எரிந்து விட்டதால், மரம் எந்நேரமும் முறிந்து விழும்? அபாயம் உள்-ளது. அதனால், புளிய மரத்தை அகற்ற நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ