உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோரிக்கைகளை வலியுறுத்திவருவாய்த்துறை ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்திவருவாய்த்துறை ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்திவருவாய்த்துறை ஆர்ப்பாட்டம்நாமக்கல்:பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஜயகாந்த் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு, மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பு, ஐந்து சதவீதம் என்பதை ரத்து செய்து மீண்டும் பழைய முறைப்படி, 25 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை பிரிவில், 2023 மார்ச், 31 முதல் கலைக்கப்பட்ட, 97 பணியிடங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி