உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரம் சந்தையில் தக்காளி கிலோ ரூ.25

ராசிபுரம் சந்தையில் தக்காளி கிலோ ரூ.25

ராசிபுரம்: ராசிபுரம் உழவர் சந்தையில், கடந்த வாரம் கிலோ, 40 ரூபாய்க்கு விற்ற கத்தரிக்காய், நேற்று, 30 ரூபாய்க்கு விற்றது. ஒரே வாரத்தில், 10 ரூபாய் குறைந்துள்ளது. அதேபோல் பாகற்காய், கடந்த வாரம் கிலோ, 60 ரூபாய்க்கு விற்றது. நேற்று கிலோவுக்கு, 10 ரூபாய் குறைந்து, 50 ரூபாய்க்கு விற்றது.இதேபோல், தக்காளி கிலோ, 25, வெண்டை, 20 புடலை, 22, பீர்க்கன்காய், 30, சுரைக்காய், 15, பச்சை மிளகாய், 75, சின்ன வெங்காயம், 42, பெரிய வெங்காயம், 50, முட்டைகோஸ், 40, கேரட், 110, பீன்ஸ், 50, பீட்ரூட், 50 ரூபாய்க்கு விற்பனையானது. 13,650 கிலோ காய்கறி, 4,115 கிலோ பழங்கள், 195 கிலோ பூக்கள் என மொத்தம், 17,960 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகியுள்ளது. இதன் மொத்த மதிப்பு, 7.1 லட்சம் ரூபாயாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை