நாமக்கல் மாவட்டத்திற்கு கூடுதலாக270 பெட்ரோல் ஸ்கூட்டர் ஒதுக்கீடு
நாமக்கல் மாவட்டத்திற்கு கூடுதலாக270 பெட்ரோல் ஸ்கூட்டர் ஒதுக்கீடுநாமக்கல்:''நாமக்கல் மாவட்டத்திற்கு கூடுதலாக, 270 பெட்ரோல் ஸ்கூட்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வருவாய், மாற்றுத்திறனாளிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், 217 பயனாளிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நலத்திட்ட உதவிகள் வழங்கி, எம்.பி.ராஜேஸ்குமார் பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், 204.74 கோடி ரூபாய் மதிப்பில், 5,800 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டு வீடு கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 70 பேருக்கு, 77 லட்சம் ரூபாய் மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. கலெக்டரின் முயற்சியால், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி, மாநில அரசின் நிதியின் கீழ், நாமக்கல் மாவட்டத்திற்கு கூடுதலாக, 270 பெட்ரோல் ஸ்கூட்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு பேசினார்.தனித்துணை கலெக்டர் பிரபாகரன், கூடுதல் எஸ்.பி., தனராசு, பஞ்., உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.துணை செயலாளர் கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.