உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கந்து வட்டி கொடுமையால் ரியல் எஸ்டேட் புரோக்கர் தற்கொலை: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

கந்து வட்டி கொடுமையால் ரியல் எஸ்டேட் புரோக்கர் தற்கொலை: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

ப.வேலுார் : கந்து வட்டி கொடுமையால், வீடியோ வெளியிட்டு ரியல் எஸ்டேட் புரோக்கர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு கார-ணமான குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்-பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே, பொய்யேரியை சேர்ந்-தவர் மணிகண்டன், 42; ரியல் எஸ்டேட் புரோக்கர். இவர் கடந்த, ஆறு மாதத்திற்கு முன், நன்செய் இடையாரை சேர்ந்த சோமசுந்தரம், லட்சுமி தம்பதியரிடம், மூன்று லட்சம் ரூபாய், வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். சில மாதங்களாக வட்டி, அசலை செலுத்த முடியாமல் மணிகண்டன் இருந்துள்ளார். இதனால், கடந்த, 16ல் மணிகண்டன் வீட்டுக்கு சென்ற சோமசுந்-தரம், லட்சுமி தம்பதியர், 3 லட்சம் ரூபாய்க்கு, வட்டி, அசல் சேர்த்து, 15 லட்சம் ரூபாய் தர வேண்டும் என, மிரட்டல் விடுத்-துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன், அன்றிரவு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, ப.வேலுார் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.சம்பவத்தன்று, மணிகண்டன் தற்கொலைக்கு காரணமானவர்-களை கைது செய்யக்கோரி, அவரது உறவினர்கள் சாலை மறி-யலில் ஈடுபட்டனர். இதையடுத்து, ப.வேலுார் டி.எஸ்.பி., சங்-கீதா உத்தரவுப்படி, கந்துவட்டி கும்பலை கைது செய்ய இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையில் எஸ்.ஐ.,க்கள் மோகன், முருகேசன், செந்தில்குமார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை