போஸ்டர் ஒட்டியதால் பள்ளி சுவர் அலங்கோலம்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அடுத்த ஆவாரங்காடு பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்-ளியை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சுவற்றில், அரசியல் கட்சியினர், வர்த்தக நிறுவனத்தினர், போஸ்டர், நோட்டீஸ்களை ஒட்டியுள்ளனர். இதனால் அரசு பள்ளி சுவர், அலங்கோலமாக காணப்படுகிறது. பள்ளி சுவரில், இதுபோன்ற போஸ்டர் ஒட்டும் செயலை கைவிட வேண்டும். மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாணவியர் பயன்பெறும் வகையில், விழிப்-புணர்வு, பொது அறிவு உள்ளிட்ட வாசகத்தை, சுவரில் எழுத நட-வடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.