உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதிய தார்ச்சாலை பணி தரம் குறித்து சோதனை

புதிய தார்ச்சாலை பணி தரம் குறித்து சோதனை

மல்லசமுத்திரம், ; திருச்செங்கோடு உட்கோட்டத்தில் முடிவுற்ற மற்றும் நடந்து வரும் சாலைப்பணிகளின் தரத்தை, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சோதனை செய்தார்.தமிழக முதல்வரின் சாலை மேம்பாடு திட்-டத்தின் கீழ் நடந்து வரும் ஓமலுார், சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி சாலையை, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பரா-மரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் பார்வையிட்டார். அப்போது, அமைக்கப்பட்ட தார்ச்சாலையின் தரத்தை உறுதி செய்தார்.நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பரா-மரிப்பு கோட்டப்பொறியாளர் திருகுணா, திருச்-செங்கோடு உதவி கோட்ட பொறியாளர் நட-ராஜன், தரக்கட்டுப்பாடு உதவிகோட்ட பொறி-யாளர் தமிழரசி மற்றும் உதவிப்பொறியாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ