மேலும் செய்திகள்
மஞ்சள் ஏலம் 19ல் 'லீவு'
17-Aug-2024
நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஆர்.சி.எம்.எஸ்.,சில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடத்தப்படுகி-றது. ஈரோட்டிற்கு அடுத்த பெரிய மஞ்சள் மார்க்கெட் நாமகிரிப்-பேட்டையில் உள்ளது. 17 தனியார் மண்டிகள் மற்றும் ஆர்.சி.எம்.எஸ்., ஆகியவை மூலம் குறைந்தபட்சம், 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும். மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வருவதற்கு முன், விவசாய நிலத்தில் இருந்து வெட்டி, வேக வைத்து, காயவைத்து, துாய்-மைப்படுத்த வேண்டும்.ஆனால், கடந்த வாரம் முழுவதும் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதிகளில், மதியத்திற்கு மேல் தொடர்ந்து மழை பெய்ததால், மஞ்சளை தயார் செய்யும் பணி பாதிக்கப்பட்டது.இதனால், நேற்று நடந்த ஏலத்திற்கு, மஞ்சள் வரத்து குறைந்-ததால், மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது. அடுத்த வாரம் வழக்-கம்போல் மஞ்சள் ஏலம் நடக்கும் என, ஆர்.சி.எம்.எஸ்., நிர்-வாகம் தெரிவித்துள்ளது.
17-Aug-2024