உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போலீஸ் ஸ்டேஷனில்130 துப்பாக்கி ஒப்படைப்பு

போலீஸ் ஸ்டேஷனில்130 துப்பாக்கி ஒப்படைப்பு

சேந்தமங்கலம்;லோக்சபா தேர்தலையொட்டி, கொல்லிமலை உள்ளிட்ட நான்கு போலீஸ் ஸ்டேஷன்களில் 130 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் தேதி கடந்த, 16ல் அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்கள், அந்தந்த போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும் என, தேர்தல் நடத்தும் அலுவலர் உமா உத்தரவிட்டிருந்தார்.இதையடுத்து, கொல்லிமலையில் உரிமம் பெற்று வைத்திருந்த, 63 துப்பாக்கி, சேந்தமங்கலத்தில் 40, புதுச்சந்திரம் 19, எருமப்பட்டியில், 8 என, நான்கு போலீஸ் ஸ்டேஷன்களிலும், 130 துப்பாக்கிகளை உரிமையாளர்கள் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி