நாமக்கல்;லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளில், ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பணியாற்றுவதற்கு, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், கணினி மூலம் சுழற்சி முறையில் முதற்கட்டமாக தேர்வு செய்யும் பணி நடந்தது.இது குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் உமா கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலையோட்டி, 6 சட்டசபை தொகுதிகளில், 1,628 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி மையங்களில், ஏப்., 19ல், பணியாற்ற, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளிலும், தலா ஒரு முதன்மை அலுவலர் மற்றும் மூன்று நிலைகளிலான ஓட்டுச்சாவடி அலுவலர்கள் என, மொத்தம், 4 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ராசிபுரம் சட்டசபையில், 261 ஓட்டுச்சாவடிகளுக்கு, 1,252 பேர், சேந்தமங்கலத்தில், 284க்கு, 1,364 பேர், நாமக்கல்லில், 289க்கு, 1,388 பேர், ப.வேலுாரில், 254க்கு, 1,220 பேர், திருச்செங்கோட்டில், 261ல், 1,252 பேர், குமாரபாளையத்தில், 279ல், 1,340 பேர் என, மொத்தம், 1,628 ஓட்டுச்சாவடிகளுக்கு, 6,512 அலுவலர்கள், 20 சதவீதம் தயார்நிலையில், 1,304 பேர் என, மொத்தம், 7,816 அலுவலர்களுக்கு, கணினி மூலம் முதற்கட்டமாக சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.டி.ஆர்.ஓ., சுமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிவக்குமார், தேர்தல் தாசில்தார் திருமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.