மேலும் செய்திகள்
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம்
20-Dec-2025
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு
20-Dec-2025
இயற்கை உரம் தயாரிப்பு மாணவர்கள் செயல்விளக்கம்
20-Dec-2025
நுாலகம் திறப்பு விழா
20-Dec-2025
கந்தசாமி கோவிலில் அமாவாசை வழிபாடு
20-Dec-2025
ப.வேலுார்:கரும்புக்கு கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்மணி உறுதியளித்துள்ளார். நாமக்கல் லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்மணி, கபிலர்மலை ஒன்றிய பகுதிகளான பெருங்குறிச்சி, குப்பரிக்காபாளையம், சுள்ளி பாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, அரசம்பாளையம், ஜேடர்பாளையம் வடகரையாத்துார், ஆனங்கூர், பிலிக்கல்பாளையம், கபிலர்மலை மற்றும் பாண்டமங்கலம், வெங்கரை டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது:கடந்த, 10 ஆண்டுகளில் அ.தி.மு.க., ஆட்சியில் பொதுமக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கரும்பு விவசாயிகளுக்கு, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைவில் வழங்கிட ஆவண செய்யப்படும். கரும்பு டன் ஒன்றுக்கு அதிக விலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.அ.தி.மு.கவிற்கு நீங்கள் வாக்களித்து, நான் வெற்றி பெற்றால், பரமத்தி பகுதியில் குடியிருந்து வருகிறேன். எந்த நேரம் வேண்டுமானாலும் என்னை நேரில் சந்திக்கலாம். உங்களுடைய கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன். தி.மு.க.,விற்கு வாக்களித்தால் அவர்கள் வாக்குறுதிகளை கொடுப்பதோடு சரி, எந்த ஒரு நடவடிக்கையோ திட்டங்களையோ செயல்படுத்த மாட்டார்கள். எனவே, வரும் லோக்சபா தேர்தலில் நீங்கள் அ.தி.மு.க.,வின் சின்னமான இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.பரமத்தி வேலுார் எம்.எல்.ஏ.,வும், தெற்கு ஒன்றிய செயலாளருமான சேகர், முன்னாள் ஆவின் சேர்மன் ராஜேந்திரன், கபிலர்மலை வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025