உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / எருமப்பட்டி யூனியனில் அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி

எருமப்பட்டி யூனியனில் அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், அ.தி.மு.க.,வின் கோட்டையாக இருந்த நிலையில், தற்போது நடந்த தேர்தலில், தி.மு.க., கூடுதல் ஓட்டுகள் பெற்றுள்ளது.சேந்தமங்கலம் தொகுதியில், அ.தி.மு.க.,வின் கோட்டையாக, எருமப்பட்டி யூனியன் கருதப்பட்டது. இப்பகுதியில் அதிகளவில் கிராமங்கள் உள்ளதால், அனைத்து மக்களும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகளாக இருந்தனர். இந்நிலையில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பழையபாளையம், சிவநாய்க்கன்பட்டி, பெருமாப்பட்டி, முத்துக்காப்பட்டி, கோடங்கிப்பட்டி ஆகிய பஞ்.,களில் மட்டுமே, அ.தி.மு.க., அதிக ஓட்டுக்களை பெற்றது. மீதமுள்ள அனைத்து பஞ்.,களிலும் ஒவ்வெரு ஓட்டுச்சாவடியிலும், தி.மு.க., 100 முதல், 500 ஓட்டுகள் வரை கூடுதலாக பெற்றுள்ளது. இதனால், அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை