உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொலை வழக்கில் அ.தி.மு.க., பஞ்., தலைவர் தலை மறைவு

கொலை வழக்கில் அ.தி.மு.க., பஞ்., தலைவர் தலை மறைவு

வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, நெ.3, கொமராபாளையம் வசந்த் நகரை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் பழனிவேல், 46. இவர், கடந்த, 2ல் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். வெண்ணந்துார் போலீசார் நடத்திய விசாரணையில், பழனிவேலின் மனைவி செல்வி, 36, இவருடைய கள்ளக்காதலனான, அ.தி.மு.க.,வை சேர்ந்த நெ.3, கொமராபாளையம் பஞ்., தலைவர் கந்தசாமி, சேலம் மாவட்டம், நெத்திமேடு, வடக்கு கரடு பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் ரவி, 48, ஆகியோர் சேர்ந்து, அத்தனுார் அடுத்த உடுப்பத்தான் புதுார் பகுதியில் பழனிவேலுவை கத்தியால் நெஞ்சில் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது.இதையடுத்து செல்வி, ரவி ஆகிய இருவரையும் கைது செய்த வெண்ணந்துார் போலீசார், ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள, பஞ்., தலைவர் கந்தசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி