உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கரும்பில் நோய் தாக்குதலை தடுக்க வேளாண்துறை அறிவுரை

கரும்பில் நோய் தாக்குதலை தடுக்க வேளாண்துறை அறிவுரை

நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் பயிரிட்டுள்ள கரும்பில், இளங்குருத்துப்புழு தாக்கம் அதிகம் உள்ளது. இதை கட்டுப்படுத்த, நாமகிரிப்பேட்டை வேளாண்துறை அறிவுரை வழங்கியுள்ளது.இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: தற்போது, கரும்பு பயிரில் இளங்குருத்து புழு தாக்கம் தென்படுகிறது. இவற்றை கட்டுப்படுத்த, தாக்கப்பட்ட காய்ந்த இளங்குருத்துக்களை சேகரித்து அழித்து விட வேண்டும். குருணைமருந்து, கார்போர் பியுரான் ஏக்கருக்கு, 4 கிலோ மற்றும், 4 கிலோ மணலுடன் கலந்து குருத்தில் இட வேண்டும். அல்லது ஒரு ஏக்கருக்கு, 10 எண்ணிக்கையில் இனக்கவர்ச்சி பொறி வைக்க வேண்டும். பின், குளோரன்டிரனிலிபுரோல் அல்லது புரொபொனோபாஸ் என்ற பூச்சிக்கொல்லி மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு, 0.5 மில்லி என்ற வீதம் கலந்து குருத்து பகுதியில் நன்றாக படும்படி தெளிக்கவும். இவ்வாறு செய்தால் இளங்குருத்து புழு தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ