உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆற்றில் குளிக்க தடை: ஷவரில் குளித்த மக்கள்

ஆற்றில் குளிக்க தடை: ஷவரில் குளித்த மக்கள்

பள்ளிப்பாளையம்,பள்ளிப்பாளையம் பகுதி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், மக்கள் ஷவரில் குளித்து மகிழ்ந்தனர்.ஆடிப்பெருக்கில் வழக்கமாக, பள்ளிப்பாளையம் ஆற்றில் புனித நீராட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வர். தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் குளிப்பதற்கும், வழிபாடு செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.இதனால், அடிப்பெருக்கு நாளான நேற்று, ஆற்றுப்பகுதி களையிழந்து வெறிச்சோடி காணப்பட்டது. ஆவத்திபாளையம் பகுதியில் மக்கள் குளிக்க வசதியாக, களியனுார் பஞ்., சார்பில் ஷவர் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த பொதுமக்கள், ஷவரில் குளித்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்