உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பட்டு விவசாயிகளுக்கு மத்திய அரசு மானியம்

பட்டு விவசாயிகளுக்கு மத்திய அரசு மானியம்

ராசிபுரம்: தமிழக, பா.ஜ.,வின் மத்திய அரசு திட்ட துறையின், மாநில துணைத்தலைவர் லோகேந்திரன் கூறியதாவது: நாமக்கல் மாவட்ட பட்டு விவசாயிகளுக்கு, பட்டு வளர்ச்சித்துறை சார்பில், 200 விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசு சார்பில் பட்டு வளர்க்க மானியம் வழங்கப்பட உள்ளது. மாநில அரசு சார்பாக ஒரு ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளுக்கு, 1.2 லட்சம் ரூபாயும், மத்திய அரசு திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கர் விவசாயிகளுக்கு, 2.43 லட்சம் ரூபாயும், இரண்டு ஏக்கர் விவசாயிகளுக்கு, 3.37 லட்சம் ரூபாயும் முழு மானியமாக வழங்கப்படுகிறது. தகுதியான விவசாயிகள் அருகில் உள்ள பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை