மேலும் செய்திகள்
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம்
20-Dec-2025
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு
20-Dec-2025
இயற்கை உரம் தயாரிப்பு மாணவர்கள் செயல்விளக்கம்
20-Dec-2025
நுாலகம் திறப்பு விழா
20-Dec-2025
கந்தசாமி கோவிலில் அமாவாசை வழிபாடு
20-Dec-2025
பள்ளிப்பாளையம், ஆனங்கூர் வழியாக குறைந்த வேகத்தில் இயக்கிய, மூன்று ரயில்களில் பயணித்த பெண் பயணிகளிடம் இருந்து, மர்ம நபர்கள் செயினை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, ஈரோடு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே, ஆனங்கூர் பகுதியில் ரயில் பாதை பராமரிப்பு பணி, கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதனால், ஆனங்கூர் பகுதி யில் குறைவான வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வேகத்தை பயன்படுத்தி, கடந்த, 14 இரவு, குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில், ஜன்னல் ஓரத்தில் பயணித்த மணிமேகலை, 35, என்ற பெண்ணிடம், அவர் அணிந்திருந்த, ஐந்து கிராம் தங்க செயினை, மர்ம நபர் பறித்துள்ளார். அதே நாளில், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த கல்யாணி, 52, சேரன் எக்ஸ்பிரஸில் பயணித்த ஜெயசித்ரா, 37, ஆகிய இரண்டு பெண்களிடம், தலா ஒன்றரை பவுன் செயினை, மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். இந்த, மூன்று சம்பவமும் ஆனங்கூர் ரயில்பாதை வழியாக மெதுவாக செல்லும் போது, அந்த வாய்ப்பை பயன்படுத்தி காட்டுப்பகுதியில் அதிகாலை, 3:00 முதல் 4:00 மணிக்குள் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இதனால் பெண் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதுகுறித்து, ஈரோடு, கோவை ரயில்வே போலீசில், பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளித்துள்ளனர். அந்த புகார்படி, மொபைல் போன் சிக்னல் மற்றும் அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025